புதன், 8 ஆகஸ்ட், 2012

கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த செவ்வாய் படங்கள் : நாசா வெளியிட்டது

     செவ்வாய் கிரக மேற்பரப்பில் கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த வண்ணப் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

     கலிஃபோர்னியா மாகாணம் பசடேனா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கியூரியாசிட்டியில் உள்ள Hand Lense Imager மூலம் எடுக்கப்பட்ட வண்ணப்படங்கள் வெளியிடப்பட்டன.


     செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கியூரியாசிட்டி விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு வடக்குப்புறத்தில் உள்ள பகுதிகள், அந்த படங்களில் பல வண்ணங்களில் தெரிந்தன. குழிவான பகுதிகளை பெரிதாக்கி, அவற்றின் மேற்பரப்பு குறித்து நாசா விஞ்ஞானிகள் தெளிவாக விளக்கினர்.

     இவை தவிர, கியூரியாசிட்டி ரோவர் செவ்வாயில் தரையிறங்கியது, அதன் இயக்கம் போன்றவை அடங்கிய படங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.

2 கருத்துகள்:

  1. thanks dear..................
    lot of photo's send me. my mail Lakshavelbrightaims@gmail.com

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா8/08/2012 12:03:00 PM

    super ...........
    u r a roboooooooooo

    பதிலளிநீக்கு